Friday, 4 November 2016

எங்க ஊர் திருவிழா..



எங்க
ஊர் திருவிழா..





நாலு நாள் லீவு போட்டு

ஏழு ஊரு சாமி பாக்க 

கூடிய கூட்டம் நாங்க !



சந்தன அலங்காரம் அம்மனுக்கு ஜொலிக்க 

தந்தன தாளம் ஊருக்குள்ள ஒலிக்க

சொந்த பந்தம் ஒன்னு கூடி 

அம்மன் அருள் வேண்டிக்கிட்டோம் !



ஆத்துல அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்க

கூத்துல ஆட்டம் ஊர்வலமாய் நடக்க 

காத்துல கை வீசி கோவிலுக்கு 

போனோமுங்க !





வேட்டும் வெடியுமா திருவிழா கலைகட்ட

வேட்டியும் சட்டையுமா நாங்க நடைகட்ட 

பாட்டுச் சத்தமெல்லாம் கலகலனு கேக்குது 

மேட்டுக்குடி மைக் செட்டுல !





ஆவணி மாசத்துல திருவிழா கூட்டத்துல 

தாவணி கட்டி வந்தா

மேவாணி அக்கா பொண்ணு !   



தங்க ஜரிகையில மங்களமா புடவை கட்டி  

பொங்க பானைக்கு அங்கங்க கல்லு கூட்டி

எங்க ஊரு அம்மணியெல்லாம் 

அழகா நின்னாங்க !





வெளியூரு மாப்பிளை 

புளியூரு  மாப்பிளை   ஊருக்குள்ள விளையாட 

கண்ணை கட்டி சுத்தி விட்டோம் 

பானை கட்டி உறியடிக்க !



அம்மன் அலங்காரம் 

பூசாரி அய்யா

ஊரு பெரியவங்க 

அழகா பொண்ணுங்க 

கம்பீரமா பசங்க

சொந்த பந்தங்க 

சின்ன குழந்தைங்க 

ராட்டினம் 

பஞ்சு முட்டாய் 

பொம்மை கார் 

பொங்கல் பானை

ஜோடிக்  கரும்பு 

குலவைச் சத்தம் 


திருவிழா கூட்டம் - னு கடைசில 

மஞ்சத்  தண்ணி ஆட்டம் - னு 

முடுஞ்சுது எங்க ஊருத் திருவிழா...!


                                                                                - பரத் முருகன்

 

1 comment:

  1. ஆவணி மாசத்துல திருவிழா கூட்டத்துல

    தாவணி கட்டி வந்தா

    மேவாணி அக்கா பொண்ணு !

    Superrrrrrr...

    ReplyDelete