" பெண்ணின் அழகு " - என் பார்வையில்
பெண்...
பெண் என்பவள்
இயற்கையில் அழகுதான் !
அடடா..!
என்ன சொல்வது
கருப்பு வெள்ளை வான வில்லாய்
அவளின் தனி மொழி பேசும்
விழிகளும்..!
தென்றல் காற்றில்
மெல்லிய காதோரம்
அசையும் ஓரிரு முடிகளும்..!
செவ்வானம் நடுவே
ஒற்றை நிலவை போல்
பெண்ணின் நெற்றி பொட்டும்..!
பருவம் கண்ட நாளில்
அவள் கொள்ளும்
வெட்கமும் தனியழகுதான்..!
இளஞ்சிவப்பு தாமரை போல்
இதழ் விரியாத மெல்லிய
அவளின் புன்னகையும்..!
விழாக்கால தோரணம் போல்
தென்றலில் அசைந்தாடும்
கருப்பு நிறச் சாரலாய்
பெண்ணின் கூந்தலும்..!
கல்யாண பேச்சுகள்
காதில் பட்டாலே
வெண்மதி போன்று
மாறும் முகமும் ..!
தாயாக அன்பிலும்
தாரமாக துணையிலும்
தோழியாக அக்கறையிலும்
மாற்றம் கொண்ட வாழ்வில்
மங்கை என்பவள்
மாறாத அழகுதான்..!
இருளின் விளிம்பில்
தனிமையில் இருக்கும்
அவளது பயமும் ..!
குழந்தை தனமான
குட்டி குட்டிச் சேட்டைகளும் !
குடும்ப முறையில்
பெண்ணின் பாங்கான
பங்களிப்பும் ..!
கஷ்டம் என வந்தவரை
கலங்க விடாமல்
கருணை செய்வதும்..!
தீரன் எவன் வந்தாலும்
சூறையாடி வெற்றி
கொள்ளும் வீரத்திலும் ..!
புகுந்த வீட்டுக் காயம்
பிறந்த வீட்டில் காட்டாத
போலி பாசாங்கும்..!
பெண்ணின் ஓரழகுதான்..
உண்மையில் சொல்லப்போனால்
எந்த ஒரு கவிஞனின்
கற்பனைக்கும் எட்டாத
கவிதையாய் " பெண் "
பேரழகுதான் ...!
- பரத் முருகன் |
Nilathil irukkum
ReplyDeletenunnuyirgalukku kooda
thammai ariyaathu
theengu vilaikka koodathu
enbatharkaagave
kolusu anibavargal thaan
PENGAL..!