Friday, 25 November 2016

மழை நேரம்




மழை நேரம்
( என் நினைவில் )



சட சடவென பெய்யுது மழை
பட படவென விரித்தேன் குடை
கட கடவென நடந்தேன் நடை
மட மடவென வீட்டை நோக்கி

சல சலவென  காற்றில்
தட தடவென மரங்கள் ஆட
சொட்டுச்  சொட்டாய் மழைத்துளி
பட்டு  பட்டுப் பாடல் இசைக்க

வேரோடு மரம் ஒன்னு
தார் ரோடு பக்கத்துல
பாரம் ரொம்ப தாங்காம
ஓரமா சாஞ்சுடுச்சு..

ஆட்டோ, மாட்டு  வண்டி
போட்டா போட்டி போட்டுக்கிட்டு
ஓட்டமா ஊர்ந்து போனது
ரோட்டு மேல சேத்துக்குள்ள..

ஜன்னல் ஓர கம்பிவழி
பின்னல் ஜடை போட்டுக்கிட்டு
பொண்ணு ஒன்னு எட்டிப்பாத்தா
மின்னல் மழை பெய்யுறத..

மழை பெஞ்ச மண் வாசம்
அலை போல வெளிர் வானம்
வெள்ளி கிழமை சாயங்காலம்
பள்ளிக்கூட பசங்க முகம்

ஓஞ்சு போன மழையில
சாஞ்சு வந்த மினி பஸ்ஸு
ரோட்டு ஓர டீக்கடை
டீக்கடைல நாலு பேரு..

மேல் எல்லாம் குளிர் காத்து
கால் எல்லாம் சேத்து தண்ணி
ஊரெல்லாம் பாத்துகிட்டு
ஜோரா வந்து சேர்ந்தேன்
என் வீட்டுக்கு....


                                                                                  - பரத் முருகன்  

  

 
 

No comments:

Post a Comment