Wednesday, 14 December 2016
என் முதல் காதல் - கடிதம் ( அ .. ஆ .. இ .. வரை )
காதல் தோல்வி
காதல் தோல்வி
காதலும்
கவிதையும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" எழுத்துப்பிழை "
காதலும்
கனவும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" விழிப்பு "
காதலும்
உயிரும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" இறப்பு "
காதலும்
இளமையும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" நரை முடி "
காதலும்
உடலும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" ஊனம் "
காதலும்
காமமும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" வெட்கம் "
காதலும்
காதலரும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" சந்தேகம் "
காதல் தோல்வி
என ஒன்று
உண்டேயானால்..
காதல் என்பது
" வாழ்க்கை "
கவிதையும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" எழுத்துப்பிழை "
காதலும்
கனவும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" விழிப்பு "
காதலும்
உயிரும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" இறப்பு "
காதலும்
இளமையும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" நரை முடி "
காதலும்
உடலும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" ஊனம் "
காதலும்
காமமும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" வெட்கம் "
காதலும்
காதலரும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" சந்தேகம் "
காதல் தோல்வி
என ஒன்று
உண்டேயானால்..
காதல் என்பது
" வாழ்க்கை "
- பரத் முருகன்
Tuesday, 13 December 2016
மழைக்கால மேகங்கள்
மழைக்கால மேகங்கள்
கருப்பாக
கலையாக
பொண்ணு ஒன்னு
எட்டிப் பாக்க..!
கண் சிமிட்டி
மின்னலென
வேகத்தோடு
வெட்கப்பட..!
அவளுக்கு
கல்யாண ஆசை
போல
மேள தாளமென
எதோ சொல்லிப் போன..!
ஏர் புடுச்ச விவசாயி
ஏறெடுத்து பாத்தாரு
கள்ளி அவ
கண் சிமிட்ட..!
கன்னி பொண்ணு
சிரிச்சாலே
எண்ணம் எல்லாம்
சந்தோஷம்..
ஆனாலும்
கொஞ்ச நேரத்தில்
அழப்போற ..
ஏனோ நெஞ்சுக்குள்ள
மண் வாசம்..
மங்கை அவ
யாருன்னா ??
மழை பெய்ய
காத்திருக்கும்
" கார் மேகம் "
- பரத் முருகன்
Friday, 25 November 2016
மழை நேரம்
மழை நேரம்
( என் நினைவில் )
( என் நினைவில் )
சட சடவென பெய்யுது மழை
பட படவென விரித்தேன் குடை
கட கடவென நடந்தேன் நடை
மட மடவென வீட்டை நோக்கி
சல சலவென காற்றில்
தட தடவென மரங்கள் ஆட
சொட்டுச் சொட்டாய் மழைத்துளி
பட்டு பட்டுப் பாடல் இசைக்க
வேரோடு மரம் ஒன்னு
தார் ரோடு பக்கத்துல
பாரம் ரொம்ப தாங்காம
ஓரமா சாஞ்சுடுச்சு..
ஆட்டோ, மாட்டு வண்டி
போட்டா போட்டி போட்டுக்கிட்டு
ஓட்டமா ஊர்ந்து போனது
ரோட்டு மேல சேத்துக்குள்ள..
ஜன்னல் ஓர கம்பிவழி
பின்னல் ஜடை போட்டுக்கிட்டு
பொண்ணு ஒன்னு எட்டிப்பாத்தா
மின்னல் மழை பெய்யுறத..
மழை பெஞ்ச மண் வாசம்
அலை போல வெளிர் வானம்
வெள்ளி கிழமை சாயங்காலம்
பள்ளிக்கூட பசங்க முகம்
ஓஞ்சு போன மழையில
சாஞ்சு வந்த மினி பஸ்ஸு
ரோட்டு ஓர டீக்கடை
டீக்கடைல நாலு பேரு..
மேல் எல்லாம் குளிர் காத்து
கால் எல்லாம் சேத்து தண்ணி
ஊரெல்லாம் பாத்துகிட்டு
ஜோரா வந்து சேர்ந்தேன்
என் வீட்டுக்கு....
பட படவென விரித்தேன் குடை
கட கடவென நடந்தேன் நடை
மட மடவென வீட்டை நோக்கி
சல சலவென காற்றில்
தட தடவென மரங்கள் ஆட
சொட்டுச் சொட்டாய் மழைத்துளி
பட்டு பட்டுப் பாடல் இசைக்க
வேரோடு மரம் ஒன்னு
தார் ரோடு பக்கத்துல
பாரம் ரொம்ப தாங்காம
ஓரமா சாஞ்சுடுச்சு..
ஆட்டோ, மாட்டு வண்டி
போட்டா போட்டி போட்டுக்கிட்டு
ஓட்டமா ஊர்ந்து போனது
ரோட்டு மேல சேத்துக்குள்ள..
ஜன்னல் ஓர கம்பிவழி
பின்னல் ஜடை போட்டுக்கிட்டு
பொண்ணு ஒன்னு எட்டிப்பாத்தா
மின்னல் மழை பெய்யுறத..
மழை பெஞ்ச மண் வாசம்
அலை போல வெளிர் வானம்
வெள்ளி கிழமை சாயங்காலம்
பள்ளிக்கூட பசங்க முகம்
ஓஞ்சு போன மழையில
சாஞ்சு வந்த மினி பஸ்ஸு
ரோட்டு ஓர டீக்கடை
டீக்கடைல நாலு பேரு..
மேல் எல்லாம் குளிர் காத்து
கால் எல்லாம் சேத்து தண்ணி
ஊரெல்லாம் பாத்துகிட்டு
ஜோரா வந்து சேர்ந்தேன்
என் வீட்டுக்கு....
- பரத் முருகன்
Monday, 14 November 2016
என் கல்லூரி நினைவுகள்
திரும்பி பார்க்கலாமா...
வண்ண மலர்கள்
நாம்...
ஏகப்பட்ட எதிர்பார்ப்பும்
எக்கச்சக்க கனவுகளும் தான்
நம் கல்லூரி வாழ்க்கையின்
தொடக்கம்...
வகுப்புல அடங்காம மாட்டிகிட்டு
அப்பப்ப அமைதியா நடிச்சுகிட்டு
கலாய்ச்சு திருஞ்ச கலகலப்பும்
தீர்ந்ததோ...!
உணவு இடைவெளியில்
ஒரே டிப்பனில்
ஒன்பது பேர் சாப்பிட்ட
நிமிடமும் முடிந்ததோ...!
கிலோ கணக்கில்
கடலை போட்டு
கவலை மறந்த காலமும்
முடிந்ததோ...!
ஓரமாக நின்னு நின்னு
ஒதுங்கி ஒதுங்கி பாத்துகிட்ட
ஒரு தலை காதலும்
கலைந்ததோ...!
கடைசி நேர ASSIGNMENT-ம்
SIGN வாங்காத RECORD நோட்- ம்
நம் கைவிட்டு பிரிந்ததோ..!
தேர்வு நேர பயமும்
அதற்கு காலை நேர
படிப்பும் உருண்டோடி
போனதோ...!
ஐந்து பைக்கில்
பதினைத்து பேர்
சுற்றி திரிந்த காலமும்
சீக்கிரமாய் போனதோ..!
அரியர் வெச்சாலும்
அறிவாளி நாமதாண்டா னு
ஆட்டம் போட்ட நொடிகளும்
ஓடியதோ..!
காலம் தான் முடிந்தாலும்
கடிகாரங்கள் ஓடினாலும்
எங்கள் மனதில்
இருக்கும் பொக்கிஷங்கள்...
அஞ்சு ரூபா காசும்
பாக்கெட்டுல இல்லாம
அம்பானி போல சுத்துனோம்
நண்பன் கூட சேந்துகிட்டு...!
எங்கள் ஆய்வக
கணிபொறியும் சொல்லும்
கள்ளம் கலந்த எங்கள்
கணிப்பொறி அறிவை..!
கண்டதெலாம் கிறுக்கிகிட்டு
கவிதைனு சொல்லிக்குவோம்
மொக்கை போட்டாலும்
அழகா சிரிச்சுக்குவோம்..!
குட்டி கிட்டி சண்டை
எட்டித்தான் பார்த்தாலும்
கண்டுகாம போய்கிட்டோம்...!
டேய் " நண்பா " னு
சொல்லிக்கிட்டு
நடை ஒன்னு நடந்தாலே
சோகம் எல்லாம்
மறந்துபுட்டோம்..!
இப்படி எழுதியல்லாம்
தீராது எங்களோட
கல்லூரி வாழ்க்கை
நினைச்சுட்டு இருந்தாலே
பல யுகம் வாழ்ந்திடுவோம்....
உதிர்ந்த பூக்களாய்
பிரிந்தாலும்
எங்கள் நட்பு
என்னும் வேர்
கல்லூரியில் என்றும்
புதைந்தே இருக்கும்
அழியா நினைவுகளாய்...
இப்படிக்கு
- நினைவுகள்
- பரத் முருகன்
Tuesday, 8 November 2016
காதலியின் கல்யாணம்
காதலியின் கல்யாணம்
மஞ்சள் தாலிக்கு
வாய் பேச முடுயுமானால்
அதுவும்
சொல்லியிருக்கும்..
அந்த மூன்றாவது
முடுச்சில்..
என்னவென்றால் ,
அங்கே
உன்னை நேசித்தவன்
நடை பிணமாய்
சுத்துகிறான்
இறுதி ஊர்வலம்
போல..
இங்கே
நீ சிரித்து
கொண்டிருக்கிறாய்
புகைப்படம் எடுக்க
மண ஊர்வலம்
சூழ ..
வாய் பேச முடுயுமானால்
அதுவும்
சொல்லியிருக்கும்..
அந்த மூன்றாவது
முடுச்சில்..
என்னவென்றால் ,
அங்கே
உன்னை நேசித்தவன்
நடை பிணமாய்
சுத்துகிறான்
இறுதி ஊர்வலம்
போல..
இங்கே
நீ சிரித்து
கொண்டிருக்கிறாய்
புகைப்படம் எடுக்க
மண ஊர்வலம்
சூழ ..
என் காதலி
யாரோ ஒருவருடன் "
- பரத் முருகன்
Saturday, 5 November 2016
குட்டிக் கவிதைகள்
குட்டிக் கவிதைகள்
என் சட்டையும்
ஊனம் ஆனது
கழண்டு விழுந்த
" பட்டனால் " ( Button )
--------------------------------------------------------------------------------------------------------
* மழை
நான்
கீழே விழுந்ததால்
அழவில்லை..
அழுததால்
தான் கீழே விழுகிறேன் !
கீழே விழுந்ததால்
அழவில்லை..
அழுததால்
தான் கீழே விழுகிறேன் !
" மழைத் துளி "
--------------------------------------------------------------------------------------------------------
* என் கவிதை
![]() | ||
வெள்ளை காகிதத்தின் மேல்
கொள்ளைக் காதல்
என் பேனாவுக்கு..
" பிறந்தது என் கவிதைகள் "
- பரத் முருகன்
--------------------------------------------------------------------------------------------------------
Friday, 4 November 2016
பெண்ணின் அழகு - என் பார்வையில்
" பெண்ணின் அழகு " - என் பார்வையில்
பெண்...
பெண் என்பவள்
இயற்கையில் அழகுதான் !
அடடா..!
என்ன சொல்வது
கருப்பு வெள்ளை வான வில்லாய்
அவளின் தனி மொழி பேசும்
விழிகளும்..!
தென்றல் காற்றில்
மெல்லிய காதோரம்
அசையும் ஓரிரு முடிகளும்..!
செவ்வானம் நடுவே
ஒற்றை நிலவை போல்
பெண்ணின் நெற்றி பொட்டும்..!
பருவம் கண்ட நாளில்
அவள் கொள்ளும்
வெட்கமும் தனியழகுதான்..!
இளஞ்சிவப்பு தாமரை போல்
இதழ் விரியாத மெல்லிய
அவளின் புன்னகையும்..!
விழாக்கால தோரணம் போல்
தென்றலில் அசைந்தாடும்
கருப்பு நிறச் சாரலாய்
பெண்ணின் கூந்தலும்..!
கல்யாண பேச்சுகள்
காதில் பட்டாலே
வெண்மதி போன்று
மாறும் முகமும் ..!
தாயாக அன்பிலும்
தாரமாக துணையிலும்
தோழியாக அக்கறையிலும்
மாற்றம் கொண்ட வாழ்வில்
மங்கை என்பவள்
மாறாத அழகுதான்..!
இருளின் விளிம்பில்
தனிமையில் இருக்கும்
அவளது பயமும் ..!
குழந்தை தனமான
குட்டி குட்டிச் சேட்டைகளும் !
குடும்ப முறையில்
பெண்ணின் பாங்கான
பங்களிப்பும் ..!
கஷ்டம் என வந்தவரை
கலங்க விடாமல்
கருணை செய்வதும்..!
தீரன் எவன் வந்தாலும்
சூறையாடி வெற்றி
கொள்ளும் வீரத்திலும் ..!
புகுந்த வீட்டுக் காயம்
பிறந்த வீட்டில் காட்டாத
போலி பாசாங்கும்..!
பெண்ணின் ஓரழகுதான்..
உண்மையில் சொல்லப்போனால்
எந்த ஒரு கவிஞனின்
கற்பனைக்கும் எட்டாத
கவிதையாய் " பெண் "
பேரழகுதான் ...!
- பரத் முருகன் |
எங்க ஊர் திருவிழா..
எங்க
ஊர் திருவிழா..
நாலு
நாள்
லீவு
போட்டு
ஏழு
ஊரு
சாமி
பாக்க
கூடிய
கூட்டம் நாங்க
!
சந்தன
அலங்காரம் அம்மனுக்கு ஜொலிக்க
தந்தன
தாளம்
ஊருக்குள்ள ஒலிக்க
சொந்த
பந்தம்
ஒன்னு
கூடி
அம்மன்
அருள்
வேண்டிக்கிட்டோம் !
ஆத்துல
அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்க
கூத்துல ஆட்டம்
ஊர்வலமாய் நடக்க
காத்துல கை
வீசி
கோவிலுக்கு
போனோமுங்க !
வேட்டும் வெடியுமா திருவிழா கலைகட்ட
வேட்டியும் சட்டையுமா நாங்க
நடைகட்ட
பாட்டுச் சத்தமெல்லாம் கலகலனு
கேக்குது
மேட்டுக்குடி மைக்
செட்டுல !
ஆவணி
மாசத்துல திருவிழா கூட்டத்துல
தாவணி
கட்டி
வந்தா
மேவாணி
அக்கா
பொண்ணு
!
தங்க
ஜரிகையில மங்களமா புடவை
கட்டி
பொங்க
பானைக்கு அங்கங்க கல்லு
கூட்டி
எங்க
ஊரு
அம்மணியெல்லாம்
அழகா
நின்னாங்க !
வெளியூரு மாப்பிளை
புளியூரு மாப்பிளை ஊருக்குள்ள விளையாட
கண்ணை
கட்டி
சுத்தி
விட்டோம்
பானை
கட்டி
உறியடிக்க !
அம்மன்
அலங்காரம்
பூசாரி
அய்யா
ஊரு
பெரியவங்க
அழகா
பொண்ணுங்க
கம்பீரமா பசங்க
சொந்த
பந்தங்க
சின்ன
குழந்தைங்க
ராட்டினம்
பஞ்சு
முட்டாய்
பொம்மை
கார்
பொங்கல் பானை
ஜோடிக்
கரும்பு
குலவைச் சத்தம்
திருவிழா கூட்டம் - னு
கடைசில
மஞ்சத்
தண்ணி
ஆட்டம்
- னு
முடுஞ்சுது எங்க
ஊருத்
திருவிழா...!
- பரத் முருகன்
Subscribe to:
Posts (Atom)