Friday, 2 June 2017

இதயம்




நொறுங்கிய இதயம் "



காற்றில் 
மரம் அசைந்தாட ..!
சேற்றில் 
விழுந்த காய்ந்த 
இலையாய்..!

சட்டென உடைந்து 
நொறுங்கியது - நீ 
விட்டுச் சென்ற 
அடுத்த நொடியே ..

" என் இதயம்  "



                                                                               - பரத் முருகன் 


Tuesday, 30 May 2017

பெண்ணியம்

       


" பெண்ணியம் "



கள்ளிப் பாலில் 
பிறக்கிறது பெண்ணின் 
வாழ்க்கை !

மூத்த பெண்ணா 
பிறந்துவிட்டால் 
மொத்த பாரமும் 
இவளுக்கே !


பள்ளிக்கூடம் போகையில 
பட்டாம்பூச்சி இவ தானே 
பட்டாசாய் வெடிக்கும் இவள் ஆசை
பருவம் அது தொட்டாலே  !

விளையாட்டு பிள்ளை தான்
பருவம் அடையும் முன்னே 
தலையாட்டும் வாழ்க்கை என்ன 
பருவம் தொட்ட  பின்னே !

ஆண் வர்க்கம் 
சமுதாயம் 
ஏதேதோ  சொல்லி 
கிள்ளிப்  போடும் அவள்  
பெண்ணியத்தை !

கல்நெஞ்சு காரிக்கும் 
காதல் வருவதுண்டு 
காதலனை நம்பி 
கண்ணீரும் கண்டதுண்டு !

பெத்தவங்க பேச்சாள 
காதலனும் 
மத்தவங்க போல் ஆவான் 
இவள் நிலைமை அறியாமலே !

காதலனின் சாபத்துக்கும்
கணவன் என வருவோனின்
எதிர்பார்ப்புக்கும்
இடையில் இவள் புழுவாய் 
துடிப்பாளே !

பல இரவு 
இவள் கண்ணீர் 
தலையணையை 
முத்தமிட ..

பகல் கனவாய்
போகும் இவள் 
எண்ணம் பட்ட
வண்ணமான வாழ்க்கை !

கண்ணீர் உறுதுணையா 
கண் துடைக்க 
ஆள் உண்டா 
என ஏக்கத்தோடு 
எத்தனை நாளோ ?

புகுந்த வீட்டு
வலியெல்லாம்
பிறந்த வீட்டில் 
காட்டாம , கள்ளி அவ
கண் துடைப்பா..!

திருவிழா சாமி போல
ஊரே இவளே தாங்கும் 
காரணம் என்னனா
வம்சம் வளர 
சாமியே இவ தான !

என்ன பாவம் 
செய்தாலோ 
இவளுக்கும் 
" பெண் பிள்ளை '

மாமியார் , மருமகள் 
சண்டைக்கும் 
இவளே பகடை காய் 
மாமியாரும் பெண் தானே 
மருமகளும் பெண் தானே !

விதவை என்னும் 
வேஷத்தில் 
நிதமும் இவளுக்கு 
விஷமே !

மலடி என்னும் 
வேஷத்தில் 
மங்கை அவள் 
உயிர் இருக்கும் 
நடை பிணமே !

எனவே ..!

கை கூப்பி வணங்கிடுவோம் 
கள்ளம் இல்லா பெண்ணியத்தை!


                                                                                        - பரத் முருகன் 

Wednesday, 14 December 2016

என் முதல் காதல் - கடிதம் ( அ .. ஆ .. இ .. வரை )




என் முதல் காதல் -  கடிதம் 
( அ .. ஆ .. இ .. வரை )





' அ ' ன்புள்ள
எனத் தொடங்கிய
என் காதல் கடிதம் ..

' ஆ ' னால்
என்ற ஒரு
பதட்டத்துடன் ..

' இ ' ல்லை
எனும் முடிவையே
பெற்றது ..

                                                                                                    - பரத் முருகன்  


 

காதல் தோல்வி



காதல் தோல்வி 





காதலும்
கவிதையும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" எழுத்துப்பிழை "

காதலும்
கனவும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" விழிப்பு "

காதலும்
உயிரும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" இறப்பு "

காதலும்
இளமையும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" நரை முடி "

காதலும்
உடலும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" ஊனம் "

காதலும்
காமமும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" வெட்கம் "

காதலும்
காதலரும்
ஒன்றே என்றால்..
காதல் தோல்வி
" சந்தேகம் "

காதல் தோல்வி
என ஒன்று
உண்டேயானால்..
காதல் என்பது
" வாழ்க்கை "


                                                                                            - பரத் முருகன்  


 



 

Tuesday, 13 December 2016

மழைக்கால மேகங்கள்



மழைக்கால  மேகங்கள்


கருப்பாக
கலையாக
பொண்ணு ஒன்னு
எட்டிப் பாக்க..!

கண் சிமிட்டி
மின்னலென
வேகத்தோடு
வெட்கப்பட..!

அவளுக்கு

கல்யாண ஆசை
போல
மேள  தாளமென
எதோ சொல்லிப் போன..!

ஏர் புடுச்ச விவசாயி
ஏறெடுத்து பாத்தாரு
கள்ளி அவ
கண் சிமிட்ட..!

கன்னி பொண்ணு
சிரிச்சாலே
எண்ணம் எல்லாம்
சந்தோஷம்..

ஆனாலும்

கொஞ்ச நேரத்தில்
அழப்போற ..
ஏனோ நெஞ்சுக்குள்ள
மண் வாசம்..





மங்கை அவ
யாருன்னா ??

 
மழை பெய்ய
காத்திருக்கும்  


" கார் மேகம் "


                                                                                  - பரத் முருகன்  

 


Friday, 25 November 2016

மழை நேரம்




மழை நேரம்
( என் நினைவில் )



சட சடவென பெய்யுது மழை
பட படவென விரித்தேன் குடை
கட கடவென நடந்தேன் நடை
மட மடவென வீட்டை நோக்கி

சல சலவென  காற்றில்
தட தடவென மரங்கள் ஆட
சொட்டுச்  சொட்டாய் மழைத்துளி
பட்டு  பட்டுப் பாடல் இசைக்க

வேரோடு மரம் ஒன்னு
தார் ரோடு பக்கத்துல
பாரம் ரொம்ப தாங்காம
ஓரமா சாஞ்சுடுச்சு..

ஆட்டோ, மாட்டு  வண்டி
போட்டா போட்டி போட்டுக்கிட்டு
ஓட்டமா ஊர்ந்து போனது
ரோட்டு மேல சேத்துக்குள்ள..

ஜன்னல் ஓர கம்பிவழி
பின்னல் ஜடை போட்டுக்கிட்டு
பொண்ணு ஒன்னு எட்டிப்பாத்தா
மின்னல் மழை பெய்யுறத..

மழை பெஞ்ச மண் வாசம்
அலை போல வெளிர் வானம்
வெள்ளி கிழமை சாயங்காலம்
பள்ளிக்கூட பசங்க முகம்

ஓஞ்சு போன மழையில
சாஞ்சு வந்த மினி பஸ்ஸு
ரோட்டு ஓர டீக்கடை
டீக்கடைல நாலு பேரு..

மேல் எல்லாம் குளிர் காத்து
கால் எல்லாம் சேத்து தண்ணி
ஊரெல்லாம் பாத்துகிட்டு
ஜோரா வந்து சேர்ந்தேன்
என் வீட்டுக்கு....


                                                                                  - பரத் முருகன்  

  

 
 

Monday, 14 November 2016

என் கல்லூரி நினைவுகள்

திரும்பி பார்க்கலாமா...




ஒரே நூலில் கோர்த்த
வண்ண மலர்கள்
நாம்...
 
ஏகப்பட்ட எதிர்பார்ப்பும்
எக்கச்சக்க கனவுகளும் தான்
நம் கல்லூரி வாழ்க்கையின்
தொடக்கம்...
 
வகுப்புல அடங்காம மாட்டிகிட்டு
அப்பப்ப அமைதியா நடிச்சுகிட்டு
கலாய்ச்சு திருஞ்ச கலகலப்பும்
தீர்ந்ததோ...!
 
உணவு இடைவெளியில்
ஒரே டிப்பனில்
ஒன்பது பேர் சாப்பிட்ட
நிமிடமும் முடிந்ததோ...!
 
கிலோ கணக்கில்
கடலை போட்டு
கவலை மறந்த காலமும்
முடிந்ததோ...!
 
ஓரமாக நின்னு நின்னு
ஒதுங்கி ஒதுங்கி பாத்துகிட்ட
ஒரு தலை காதலும்
கலைந்ததோ...!
 
கடைசி நேர ASSIGNMENT-ம்
SIGN
வாங்காத RECORD நோட்- ம்
நம் கைவிட்டு பிரிந்ததோ..!
 
தேர்வு நேர பயமும்
அதற்கு காலை நேர
படிப்பும் உருண்டோடி
போனதோ...!
 
ஐந்து பைக்கில்
பதினைத்து பேர்
சுற்றி திரிந்த காலமும்
சீக்கிரமாய் போனதோ..!
 
அரியர் வெச்சாலும்
அறிவாளி நாமதாண்டா னு
ஆட்டம் போட்ட நொடிகளும்
ஓடியதோ..!

காலம் தான் முடிந்தாலும்
கடிகாரங்கள் ஓடினாலும்
எங்கள் மனதில்
இருக்கும் பொக்கிஷங்கள்...

அஞ்சு ரூபா காசும்
பாக்கெட்டுல இல்லாம
அம்பானி போல சுத்துனோம்
நண்பன் கூட சேந்துகிட்டு...!

எங்கள் ஆய்வக
கணிபொறியும் சொல்லும்
கள்ளம் கலந்த எங்கள்
கணிப்பொறி அறிவை..!

கண்டதெலாம் கிறுக்கிகிட்டு
கவிதைனு சொல்லிக்குவோம்
மொக்கை போட்டாலும்
அழகா சிரிச்சுக்குவோம்..!

குட்டி கிட்டி சண்டை
எட்டித்தான் பார்த்தாலும்
கண்டுகாம போய்கிட்டோம்...!

டேய் " நண்பா " னு
சொல்லிக்கிட்டு
நடை ஒன்னு நடந்தாலே
சோகம் எல்லாம்
மறந்துபுட்டோம்..!

இப்படி எழுதியல்லாம்
தீராது எங்களோட
கல்லூரி வாழ்க்கை
நினைச்சுட்டு இருந்தாலே
பல யுகம் வாழ்ந்திடுவோம்....
உதிர்ந்த பூக்களாய்
பிரிந்தாலும்
எங்கள் நட்பு
என்னும் வேர்
கல்லூரியில் என்றும்
புதைந்தே இருக்கும்
அழியா நினைவுகளாய்... 
இப்படிக்கு  
      - நினைவுகள்


                                      - பரத் முருகன்