" பெண்ணியம் "
கள்ளிப் பாலில்
பிறக்கிறது பெண்ணின்
வாழ்க்கை !
மூத்த பெண்ணா
பிறந்துவிட்டால்
மொத்த பாரமும்
இவளுக்கே !
பள்ளிக்கூடம் போகையில
பட்டாம்பூச்சி இவ தானே
பட்டாசாய் வெடிக்கும் இவள் ஆசை
பருவம் அது தொட்டாலே !
விளையாட்டு பிள்ளை தான்
பருவம் அடையும் முன்னே
தலையாட்டும் வாழ்க்கை என்ன
பருவம் தொட்ட பின்னே !
ஆண் வர்க்கம்
சமுதாயம்
ஏதேதோ சொல்லி
கிள்ளிப் போடும் அவள்
பெண்ணியத்தை !
கல்நெஞ்சு காரிக்கும்
காதல் வருவதுண்டு
காதலனை நம்பி
கண்ணீரும் கண்டதுண்டு !
பெத்தவங்க பேச்சாள
காதலனும்
மத்தவங்க போல் ஆவான்
இவள் நிலைமை அறியாமலே !
காதலனின் சாபத்துக்கும்
கணவன் என வருவோனின்
எதிர்பார்ப்புக்கும்
இடையில் இவள் புழுவாய்
துடிப்பாளே !
பல இரவு
இவள் கண்ணீர்
தலையணையை
முத்தமிட ..
பகல் கனவாய்
போகும் இவள்
எண்ணம் பட்ட
வண்ணமான வாழ்க்கை !
கண்ணீர் உறுதுணையா
கண் துடைக்க
ஆள் உண்டா
என ஏக்கத்தோடு
எத்தனை நாளோ ?
புகுந்த வீட்டு
வலியெல்லாம்
பிறந்த வீட்டில்
காட்டாம , கள்ளி அவ
கண் துடைப்பா..!
திருவிழா சாமி போல
ஊரே இவளே தாங்கும்
காரணம் என்னனா
வம்சம் வளர
சாமியே இவ தான !
என்ன பாவம்
செய்தாலோ
இவளுக்கும்
" பெண் பிள்ளை '
மாமியார் , மருமகள்
சண்டைக்கும்
இவளே பகடை காய்
மாமியாரும் பெண் தானே
மருமகளும் பெண் தானே !
விதவை என்னும்
வேஷத்தில்
நிதமும் இவளுக்கு
விஷமே !
மலடி என்னும்
வேஷத்தில்
மங்கை அவள்
உயிர் இருக்கும்
நடை பிணமே !
எனவே ..!
எனவே ..!
கை கூப்பி வணங்கிடுவோம்
கள்ளம் இல்லா பெண்ணியத்தை!
- பரத் முருகன்
Can you change your font colour. It's not suitable for background colour to view clearly.
ReplyDeleteSure Da..
DeleteNice and real poem. Thiruvizha samy pola oore ivala thangum karanam enna na vamsam valara samiye iva than.. lyric super
ReplyDeleteHappy for Ur comments
Deletemiga arumai barath bro ....
ReplyDelete