Friday, 2 June 2017

இதயம்




நொறுங்கிய இதயம் "



காற்றில் 
மரம் அசைந்தாட ..!
சேற்றில் 
விழுந்த காய்ந்த 
இலையாய்..!

சட்டென உடைந்து 
நொறுங்கியது - நீ 
விட்டுச் சென்ற 
அடுத்த நொடியே ..

" என் இதயம்  "



                                                                               - பரத் முருகன் 


Tuesday, 30 May 2017

பெண்ணியம்

       


" பெண்ணியம் "



கள்ளிப் பாலில் 
பிறக்கிறது பெண்ணின் 
வாழ்க்கை !

மூத்த பெண்ணா 
பிறந்துவிட்டால் 
மொத்த பாரமும் 
இவளுக்கே !


பள்ளிக்கூடம் போகையில 
பட்டாம்பூச்சி இவ தானே 
பட்டாசாய் வெடிக்கும் இவள் ஆசை
பருவம் அது தொட்டாலே  !

விளையாட்டு பிள்ளை தான்
பருவம் அடையும் முன்னே 
தலையாட்டும் வாழ்க்கை என்ன 
பருவம் தொட்ட  பின்னே !

ஆண் வர்க்கம் 
சமுதாயம் 
ஏதேதோ  சொல்லி 
கிள்ளிப்  போடும் அவள்  
பெண்ணியத்தை !

கல்நெஞ்சு காரிக்கும் 
காதல் வருவதுண்டு 
காதலனை நம்பி 
கண்ணீரும் கண்டதுண்டு !

பெத்தவங்க பேச்சாள 
காதலனும் 
மத்தவங்க போல் ஆவான் 
இவள் நிலைமை அறியாமலே !

காதலனின் சாபத்துக்கும்
கணவன் என வருவோனின்
எதிர்பார்ப்புக்கும்
இடையில் இவள் புழுவாய் 
துடிப்பாளே !

பல இரவு 
இவள் கண்ணீர் 
தலையணையை 
முத்தமிட ..

பகல் கனவாய்
போகும் இவள் 
எண்ணம் பட்ட
வண்ணமான வாழ்க்கை !

கண்ணீர் உறுதுணையா 
கண் துடைக்க 
ஆள் உண்டா 
என ஏக்கத்தோடு 
எத்தனை நாளோ ?

புகுந்த வீட்டு
வலியெல்லாம்
பிறந்த வீட்டில் 
காட்டாம , கள்ளி அவ
கண் துடைப்பா..!

திருவிழா சாமி போல
ஊரே இவளே தாங்கும் 
காரணம் என்னனா
வம்சம் வளர 
சாமியே இவ தான !

என்ன பாவம் 
செய்தாலோ 
இவளுக்கும் 
" பெண் பிள்ளை '

மாமியார் , மருமகள் 
சண்டைக்கும் 
இவளே பகடை காய் 
மாமியாரும் பெண் தானே 
மருமகளும் பெண் தானே !

விதவை என்னும் 
வேஷத்தில் 
நிதமும் இவளுக்கு 
விஷமே !

மலடி என்னும் 
வேஷத்தில் 
மங்கை அவள் 
உயிர் இருக்கும் 
நடை பிணமே !

எனவே ..!

கை கூப்பி வணங்கிடுவோம் 
கள்ளம் இல்லா பெண்ணியத்தை!


                                                                                        - பரத் முருகன்